ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் இலங்கையர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வமான முறையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்ம நிலையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்த நிகழ்வில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் எதிர்த்து போட்டியிட்ட ஹலரி கிளின்ரன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்றுக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.