ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
குறிப்பாக அலங்காநல்லூர் உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையால் நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் மரபினை காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக இன்றைய தினம் யாழில் இப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக வடபகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.