யாழில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் நிர்மாணப் பணிகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வடமாகாணத்தின் முக்கிய தேவையாக இருந்து வந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமென்று தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டின் தேசிய அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இதற்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படும். 2022ம் ஆண்டளவில் இந்த மைதானத்தை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.