பாலிவுட் நடிகர் சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் ஜோத்பூர் வரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை பயன்படுத்தி மானை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 9ம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கானை விடுவிப்பதாக ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை சல்மான் கான் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அதே சமயம் சிலர் இந்தியாவில் நீதித்துறை கேலிக்கூத்தாகி விட்டது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.