மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்ட களத்தில் தீப்பொறி பறக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய அட்டையை மாணவர்கள் கையில் பிடித்திருந்தனர். அதில் சிலவற்றை காணலாம்.
“கலாச்சாரம் எங்கள் உறுப்பு. அதனை தடுக்கும் கார்ப்பரேட் எங்களுக்கு செருப்பு”
“ஜல்லிக்கட்டு மாட்டைப்பற்றிய பிரச்சினை இல்லை. நாட்டைப் பற்றிய பிரச்சினை”
“வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்”
“பீட்டாவே வெளியேறு இல்லண்ணா பிஞ்சிடும் பேட்டா”
“கொம்பு வச்ச சிங்கம்டா. மஞ்சு விரட்டும் காளைடா”
ஆயிரம் இளைஞர்கள் இணைந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை”
இது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.