வெட்ட வெளிச்சமான பீட்டாவின் உண்மை முகம்!

விலங்குகளை ஒருபோதும் சித்ரவதை செய்ய அனுமதிக்க மாட்டோம் என உரத்த குரல் கொடுத்து தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள பீட்டா அமைப்பும் சில தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

‘நேதன் இனொக்ராட்’ என்ற சமூக ஆர்வலர், பீட்டாவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மேலும் கருணைக் கொலை என்ற பெயரில் பீட்டா அமைப்பு, விலங்குகளை சித்ரவதை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் பிராணிகளை இந்த பீட்டா அமைப்பு கருணைக் கொலை செய்துள்ளது. இது போன்று செய்யப்படும் கருணைக் கொலைகள் ஏராளம் என கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணப்படமும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பீட்டா நிறுவனத்தினர் தாங்கள் செல்லும் வண்டிகளிலேயே, விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகளை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்கின்றனர்.

2011-ம் ஆண்டு மட்டும் சுமார் 96 சதவீதம் வீட்டு விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’. அதேபோல 2012-ல் 602 நாய்கள், 1,045 பூனைகளைக் கொன்று குவித்திருக்கிறது.

கொல்லப்பட்ட சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டொலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர்பதன இயந்திரத்தையே பீட்டா நிறுவனம் இயக்கி வருகிறது.

மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம் விலங்குகளைக் கொன்றிருக்கிறது ’பீட்டா’.

இந்த விலங்குகளைப் பற்றிய கணக்கோ, புள்ளிவிவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், இவ்வாறு கொல்லப்படும் விலங்குகளின் உடல்கள், சில நேரங்களில், குப்பைகளைக் கட்டுவது போல, பிளாஸ்டிக் பைகளில் மூட்டை கட்டப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.