பீட்டாவின் செயல்களை சட்டரீதியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு பீட்டா அமைப்பு குந்தகம் ஏற்படுத்துகின்றது என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க விரைந்து சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ,சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு தடை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டு வர அதிமுக எம்.பி-க்கள் குடியரசு தலைவரையும், பிரதமரையும் சந்திக்க உள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.