அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் தான் கட்சியை பின்னாடி இருந்து தற்போது இயக்குகிறார் என்பது பலராலும் தற்போது பேசப்படுகிற விடயம்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், ஜெயலலிதாவிற்கு ஆலோசகர் என்று எனக்கு பட்டம் கொடுத்தது பத்திரிகைகள் தான், எனக்கு சிறப்பு பாதுகாப்பு ஏதும் தேவையில்லை.
வட மாநிலங்களான மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் போல தமிழகத்திலும் பா.ஜ.க நுழைய நினைக்கிறது, அது நடக்காது.
அவர்கள் நினைத்ததுக்கு எதிர்மாறாக ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அமைதியான முறையில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுத்தோம்.
தீபாவை பின்னிருந்து இயக்குவது யார் என எனக்கு தெரியும், அதை ஆதராத்துடன் சரியான நேரத்தில் வெளியிடுவேன்.
தீபா எங்கள் பிள்ளை, அவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அவருக்கு ஏதாவது ஆசைகள் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டியது எங்களுடைய கடமை.
தீபா எது கேட்டாலும் அதை செய்து தர நான் தயார், எங்கள் பிள்ளை தீபாவை நாங்கள் என்றும் தவறாக எடுத்து கொண்டதில்லை என நடராஜன் கூறியுள்ளார்.