மஹிந்த களவெடுத்தார் ஆனால் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொள்ளையடித்தார் என சிங்கள கடும்போக்குவாத அமைப்புக்களில் ஒன்றான தேசப்பற்றுடைய தேசிய அமைப்பின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்:

“மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை சாப்பிடவில்லை என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்”?

குணதாச அமரசேகர:

“நாட்டை சாப்பிடவில்லை ஹோய், மஹிந்த ராஜபக்ச நாட்டை காப்பாற்றியுள்ளார். நீ என்ன பிதற்றுகின்றாய். நீ எந்த ஊடகத்தைச் சேர்ந்தவன்?

ஊடகவியலாளர்கள்:

“மஹிந்த நாட்டை சாப்பிடவில்லை என்றா கூறுகின்றீர்கள்”

குணதாச அமரசேகர:

“ஆம் களவெடுத்த போதிலும் அவர் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. மஹிந்த ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.