நீர் மின்சார உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ள இலங்கை!!

நீரினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னிஆரச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மின்சார சபையின், மின்சார உற்பத்தி வரலாற்றில் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டதில்லை எனவும் அவர் எமது செய்தி பிரிவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையே இதற்கான காரணம் எனவும் பெரும்பாலன இடங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வறட்சியினால் 13 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 6 லட்சத்து 45 ஆயிரம் பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ள அதேநேரம், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களும் வறட்சியால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.