வடக்கின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் நிலைபேறான மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளிலான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகள் இன்று 19-ம் திகதி ஆரம்பமாகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய நிலைபேறான மூன்றாவது வருட பணிகள் கடந்த 8-ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று வவுனியாவிலும், நாளை யாழ்ப்பாணத்திலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.