மெரினா போராட்டத்தில் திடீர் திருப்பம்! சம்மதம் தெரிவித்த மாணவர்கள்!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் களம் இறங்கியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் இதனால் போராட்டத்தை கைவிடுமாறும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

மேலும், தமிழகத்தின் 10 அமைச்சர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தும், மாணவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

வாடிவாசல் திறந்தால் மட்டுமே வீட்டு வாசலை மிதிப்போம் என்று முழக்கமிட்டவாறு இரவுபகலாக இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் , மெரினா போராட்டத்தில் திடீர் திருப்பமாக அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்த இளைஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 15 பேர் கொண்ட குழு அமைக்க மாணவர்கள், இளைஞர்கள் தற்போது திட்டமிட்டு வருகின்றனர்.

15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டு விவேகானந்தர் இல்லம் அருகே கூட இருப்பதாகவும், அவர்கள் போராட்டக்குழுவினர் பிரதிநிதிகளாக இருந்து அனைவரின் உணர்வுகளை அரசிடம் வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.