மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்: அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா?

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என உறுதியளித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியை இன்று சந்திக்கவிருக்கிறார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

இன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகிறார். இதற்கிடையில், அதிமுக எம்பிக்கள் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து மனு கொடுக்கவிருக்கின்றனர்.

மோடியுடனான பேச்சுவார்தைக்கு பின்னர், அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.