மெரினாவில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பீட்டாவுக்கு அவர்கள் பாடை கட்டி ஊர்வலம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டாவுக்கு தடைவிதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. சென்னையிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரி அவர்கள் பாடைக் கட்டி ஊர்வலம் நடத்தினர்.
அப்போது பீட்டா அமைப்புக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டத்துக்கு திருநங்கைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.