வசமாக மாட்டிக் கொண்ட பன்னீர் செல்வம்!

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தொடங்கியது முதலே அதிகம் விமர்சிக்கப்படுபவராக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருக்கிறார். அவரை கிண்டல் செய்து பல வாசகங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் கண்களில் கண்ணீரு, எங்க இருக்கிற பன்னீரு, மோடி மோடி வாடி வாசல் வாடி போன்ற பல வாசகங்கள் நகைச்சுவையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழக அரசே மிச்சர் சாப்பிடாதே என்ற வாசகமும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தின் விளம்பர புகைப்படத்தை எடிட் செய்து முதலமைச்சர் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.