வேலை கேட்டு வந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி? டொனால்டு டிரம்பிற்கு வந்த சிக்கல்!

வேலை கேட்டு வந்த பெண்ணை கற்பழிக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை இழிவான முறை விமர்சித்த டொனால்டு டிரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

முன்னதாக டிரம்ப் மீது கடந்த ஆண்டில் பத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

டிரம்ப் மீது பாலியல் குற்றம்சாட்டியவர்களில் ஒருவர் சம்மர் ஸெர்வோஸ்.

இவர் வேலை கேட்டு சென்ற தன்னை டிரம்ப் பலவந்தமாக கட்டியணைத்து முத்தமிட்டதாகவும் கட்டிலில் தள்ளி கற்பழிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்த டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அந்தப் பெண்ணை தகாத முறையில் தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப்பின் கருத்தால் தான் வெகுவாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சம்மர் ஸெர்வோஸ், அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிரம்ப் எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.