அதிகாலையில் கண்ட கனவுகள் பலிக்குமா? அதன் உண்மை தான் என்ன?

நாம் அதிகாலை கண்ட கனவுகள் மட்டும் தான் பலிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

ஆனால் கனவுகள் என்பது நாம் ஆழ்ந்த தூக்க நிலைக்கு செல்லும் போது, நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் சில நிகழ்வுகள் நம்மை அறியாமலே தூக்கத்தில் தோன்றும் ஒருவித உணர்வாகும். இதை தான் கனவுகள் என்று கூறுகின்றோம்.

இது குறித்து சிலருக்கு பகலில் தோன்றும் கனவுகள் பலிக்குமா என்ற பல குழப்பங்கள் ஏற்படும் அல்லவா? இப்போது அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

விடியற் காலையில் கண்ட கனவுகள் பலிக்குமா?

விஞ்ஞானம் ரீதியாக நமக்கு தோன்றும், பகல் மற்றும் இரவு இது போன்ற கனவுகளின் வகைகள் அனைத்துமே ஒன்று தான் என்று கூறுகின்றார்கள்.

கனவுகள் என்பதை சுருக்கமாக விஞ்ஞானத்தில் கூறினால், நமது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு வகை கண்ணாடியாகத் தான் கனவுகள் இருக்கின்றது.

மேலும் நம்முடைய ஆழ்ந்த தூக்கத்துக்கான ஓரு அறிகுறியைத் தான் நாம் கனவு என்று நினைக்கிறோம் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.

ஆனால் மற்றபடி கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கைக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

எனவே நாம் எப்போதும் நமது வாழ்க்கையின் சிந்தனையில் தெளிவும், நல்ல எண்ணங்களையும் மட்டுமே கொண்டிருந்தால், நமக்கு என்றும் நல்லதே நடக்கும் என்று கூறுகின்றார்கள்.