ஆண்மை குறைவிற்கு இதுவும் ஒரு காரணம்!

ஆண்களின் விந்தணு உற்பத்தியானது, பல்வேறு காரணங்களினால் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

அதே போல் பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுவதால், பெரும்பாலோனோர்கள் மலடாகும் சூழ்நிலைகள் அதிகமாக ஏற்படுகிறது.

எனவே ஆண்களின் விந்தணுக்களை அதிகமாக பாதிப்பது எது என்பதை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன? அதை பற்றி இப்போது தெரிந்துக் கொள்வோம்.

ஆண்களின் விந்தணு குறைப்பாட்டிற்கு சுடுநீர் காரணமா?

ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும், அவர்களின் உடல் சூட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

மனித உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். அதற்கேற்ப தான் மனித உடலானது படைக்கப்பட்டிருக்கிறது.

உடல் சூடு அதிகரிக்கும் போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும்.

எனவே ஆண்களின் உடலில் அதிக சூடு ஏறினாலோ அல்லது சூடு நிறைந்த தண்ணீரில் தினமும் குளிப்பதாலோ அவர்களுக்கு விந்தணு உற்பத்தி கண்டிப்பாக பாதிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.