தமிழக முதல்வருக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அவசர சட்டம் வராவிட்டால் தமிழகம் திரும்பும் முதல்வர் பன்னீர்செல்வத்தை முற்றுகையிட உள்ளதாக இயக்குனர் கௌதமன் கூறியுள்ளார்.

மதுரை அவனியா புரத்தில் நடந்த போராட்டத்தின் போது இயக்குனர் கௌதமன் கலந்து கொண்டார்.

அப்போது இயக்குனர் கௌதமன் மற்றும் போராட்டக்காரகள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்தனர்.

காவல்துறையினரின் தடியடியால் கௌதமன் காயமடைந்தார்.பின்னர் விடிவிக்கப்பட்ட இயக்குனர் கௌதமன் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக்கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார்.

முதல்வர் பிரதமரை சந்தித்த பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வராவிடில் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம் என கூறினார்.

ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது அவசர சட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவசர சட்டம் நிறைவேறாமல் சென்னை திரும்பும் முதல்வர் பன்னீர்செல்வத்தை சொன்னது போல இயக்குனர் கௌதமன் முற்றுகையிடுவாரா என பேசப்படுகின்றது.