தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இன்று, அவர் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் குறித்து பேச உள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை முதல் ஓ.பன்னீர் செல்வம் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தின் வெளியே டெல்லி வாழ் தமிழர்களும், டெல்லியில் படித்து வரும் தமிழக மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கையில் பதாகைகளுடன்
ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.