யாழ். நெடுந்தீவுக்கான படகுச்சேவை நாளை முதல் குறிகட்டுவானிலிருந்து ஆரம்பிக்கப்படும்
நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஆகிய பகுதிகளின் மக்களின் வேண்டுகோளுக்காக இச்சேவை, ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
படகு சேவைக்கான திட்டங்கள் நெடுந்தீவு பிரதேச சபையின் ஊடாக உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 150 மில்லியன் ரூபா செலவில் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணப் பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வி.கனகரட்ணம் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய குழுவினர் நேற்று குறிகட்டுவான் இறங்குதுறைப் பகுதிக்குச் சென்று அங்கு புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தாரகை படகுச்சேவையினைப் பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தின் போது நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலாளர்கள்,பிரதேச சபையின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இந்தப் படகில் 250 பேர் அமர்ந்து பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.