டொனால்டு டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்!

அமெரிக்க அதிபராக நாளை டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டொமினிக் ஜோசப் என்ற 51 வயதான நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “பதவியேற்பு விழாவில் பங்கேற்று டிரம்பை கொலை செய்வேன்” என மிரட்டலாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவ ஆரம்பித்ததையடுத்து போலீசார் உடனே டொமினிக் ஜோசப்பை கைது செய்தனர்.
ஆனால், டொமினிக் ஜோசப் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், போலீசார் அவரது பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.