நிச்சயம் வெல்வோம்! ஏஞ்சலா மேத்யூஸ் நம்பிக்கை!

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிசென்சுரியனில் இன்று இரவு இலங்கை நேரப்படி 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன், அந்நாட்டில் வைத்து இருபதுக்கு இருபது போட்டியொன்றில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த டி20 போட்டியில் பல புதிய முகங்களை எதிர்நோக்கவுள்ளோம், தென் ஆப்பிரிக்காவுடனான இந்த போட்டியில் நாம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றிபெற பல புதிய வழிமுறைகளை கையான வேண்டியுள்ளது என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிக் கொண்ட 6 இருபதுக்கு இருபது போட்டிகளில் 4 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் , 2 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 இற்கு 0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.