ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சி-3’ படம் வருகிற 26-ந்தேதி ‘ரிலீஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விளம்பரம் செய்யும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சூர்யா, ஹரி கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிப்பதாக சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதை கிண்டல் செய்த பீட்டா அமைப்பு, சூர்யா தனது ‘சி.3’ படத்துக்கு விளம்பரம் தேடவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறி இருந்தது.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்கள்- மாண வர்கள் போராட்டமாக உருவெடுத் துள்ளது. இதற்கு தமிழ் திரை உலகினர் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை, மதுரையில் சூர்யா கலந்து கொள்ள ஏற்பாடு செய்து இருந்த ‘சி-3’ பட விளம்பர நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை சூர்யா ரத்து செய்துள்ளார். இதை சூர்யா ரசிகர்கள் வரவேற்று பெருமையாக பேசி வருகிறார்கள்.