ஹாலிவுட் ஹீரோவின் டீசலுடன் இந்த நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ‘டிரிபிஸ்எக்ஸ் ரிட்டன் ஆப் சாண்டர்’. இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில்மும்பையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் வின்டீசல், டைரக்டர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இவருடைய ஹாலிவுட் பட நாயகன் வின்டீசல் பற்றி பேசிய தீபிகா படுகோனே வேண்டியவர்களை புகழ்வதற்கு எல்லையே கிடையாது என்று சொல்லும்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார் அவற்றில் சில…
“படத்தில் எனக்கும் வின்டீசலுக்கும் உள்ள பொருத்தம் ‘சூப்பர்’. இரண்டு பேரும் அந்த அளவு இணைந்து நடித்திருக்கிறீர்கள் என்று பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
உண்மைதான், நெருப்பு இல்லாமல் புகையாது. எனது கற்பனையில் வின்டீசலுடன் எனக்கு அருமையான ‘கெமிஸ்ட்ரி’ இருக்கிறது. நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்று விட்டோம். இது எல்லாம் என் கற்பனையில் தான்.
‘டிரிபிள் எக்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு என்னை தேர்வு செய்ததை கடைசி வரை என்னிடம் சொல்லவில்லை. இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நள்ளிரவு 45 நிமிடம் போட்டோ ஷூட் நடத்தி அதை உறுதி செய்தார்கள்” என்றார்.
இந்த விழாவுக்கு திறந்த மனதுடன் கவர்ச்சி உடை அணிந்து வந்த தீபிகா, ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குழந்தையும் பெற்று விட்டேன்’ என்று பேசி இருப்பது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே காதலிக்கிறார் என்று பேசப்படும் நிலையில், இன்னொரு நடிகர் பற்றி இப்படியெல்லாம் பேச முடியுமா என்று மூக்கில் விரல்வைக்கிறார்கள். புகழ்வதற்கும் ஒரு எல்லை இல்லையா, என்று பேசிக்கொள்கிறார்கள்.