நமது ஆளுமை திறமை எப்படி இருக்கும் என்பதை நம்முடைய சுண்டு விரல் மற்றும் மோதிர விரலை வைத்து கூறலாம்.
மோதிர விரலின் முதல் பகுதிக்கு சுண்டு விரலின் நுனி சமமாக இருப்பது
நம்முடைய மோதிர விரலின் முதல் பகுதிக்குச் சமமாக சுண்டு விரலின் நுனிப் பகுதி இருந்தால், அவர்கள் எப்போதும் தனிமையை மட்டும் விரும்புவார்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கமானவராக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் தான் எடுக்கும் முடிவுகளே சிறந்தது என்றும் தனது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு பிடித்தது போன்று இருக்க வேண்டும் என்றும் நினைப்பவராக இருப்பார்கள்.
மோதிர விரலின் முதல் பகுதிக்கு சுண்டு விரலின் நுனிப்பகுதி அதிகமாக இருப்பது
நம் மோதிர விரலின் முதல் கட்ட பகுதியை விட சுண்டு விரலின் நுனிப் பகுதி சற்று அதிகமாக இருந்தால், அவர்கள் தன் மனதில் தோன்று உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படையாக கூறும் தன்மைக் கொண்டவர்கள்.
மேலும் இவர்கள் பொதுவான தவறுகளை ஆராய்ந்து அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி, திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளை கொடுக்க நினைப்பார்கள்.
மோதிர விரலின் முதல் பகுதியை விட சுண்டு விரலின் நுனிப்பகுதி குறைவாக இருப்பது
தனது மோதிர விரலின் முதல் பகுதியை விட சுண்டு விரலின் பகுதி குறைவாக இருந்தால், அவர்கள் தன்னுடைய கவலை மிக்க உணர்வுகளை
மற்றவர்களின் பகிர்ந்துக் கொள்வதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இவர்களை மற்றவர்கள் எளிதில் கவரும் தன்மைக் கொண்டவராக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் மற்றவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கும் தன்மையை கொண்டவர்கள். ஆனால் இவர்களுக்கு மற்றவர்களினால் வெறும் ஏமாற்றமே கிடைக்கும்.
மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்