மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போலீஸ் பாராட்டு!

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சென்னை போலீசார் பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக பேஸ்புக்கில் சென்னை காவல் துறை கூறி இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மிகவும் நம்பமுடியாத வகையில் அமைதியான வழியில் போராடுகிறார்கள். காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடம் கொடுக்காத வகையில் தொடர்ந்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை. இதை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.