நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் “ஒரு நிலையான பள்ளி சமூக திட்டத்தை நிறுவும் வேலைத்திட்டம்” கென்கல்லை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் ஜனாதிபதி பாடசாலை மாணவர்களுடன் சகஜமாக உரையாடியதோடு, பேன்ட் வாத்தியக் குழு மாணவி ஒருவரின் கிடார் ஒன்றினை ஜனாதிபதி வாசித்ததோடு பாடலையும் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விடயம் வேகமாக பரவி மக்கள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரி மீது நன் மதிப்பையும் ஏற்படுத்தியது.
இதன் பின்னர் மைத்திரி கிடார் வாசிக்கும் புகைப்படத்தை மஹிந்த ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருக்கும் வகையில் புகைப்படம் வெளியாகி பல வகை விமர்சனங்களை தோற்று வித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த புகைப்படம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீது பல்வேறுபட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அதாவது மைத்திரியின் வழியை மகிந்த தற்போது பின்பற்ற தொடங்கி விட்டாரா? மகிந்தவினால் முடியாததை மைத்திரி சாதித்துக் கொண்டு வருகின்றார், என்பதை கண்டு மகிந்த பொறாமைப்படுவதாகவும் விமர்சனங்கள் கூறப்படுகின்றன.
எவ்வாறாயினும் மகிந்தவின் ஆட்சி காலத்தில் இத்தகைய நற்பெயர் அவருக்கு கிடைக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.