தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காகப் மின்விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி, அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமது பிரசார செயற்பாடுகளுக்காகப் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் விளம்பரப் பலகைகள் அலங்காரமின் கட்டமைப்புகளுக்காகப் பெருமளவு மின்சாரம் செலவிடப்படுகிறது. அதனை மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பாவனையை கணிசமானளவு சேமிக்க முடியும்.
வறட்சி நீங்கும் வரை மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டத்துக்கு வழங்கும் ஒத்துழைப்பாக இந்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அனைவரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.