கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினரும் தமது வாக்கினை அளித்திருந்தனர்.
இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார்.
ஜனாதிபதியின் வெற்றிக்காக இலங்கையை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களை சேர்ந்த ஓரினசேர்க்கையாளர்களும் வாக்களித்துள்ளனர்.
நல்லாட்சி உருவாகுவதற்கு அவர்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும், அந்த வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக எண்ணப்படவில்லை என குறித்த சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்கள் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றால் மறு வாக்கு வேண்டும் என ஓரினசேர்க்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம் ஒரு திருநங்கை எனவும் தங்கள் வாக்கினை திருப்பி தருமாறும் குறித்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஓரினசேர்க்கை அங்கீகரிப்பது தொடர்பில் ஊடகங்களில் இரகசியமாக கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் ஓரினசேர்க்கை அங்கீகரிக்கப்படாத நிலையில், தங்கள் வாக்கினை அவர்கள் திருப்பி கேட்பதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.