யாழ். குடாநாட்டில் திடீர் மழை…! விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

யாழ். குடா நாட்டில் இன்று முற்பகல் முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பொழிந்துள்ளது. முற்பகல் 11 மணியளவில் மிதமான மழை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த மழை இன்று பிற்பகல் சற்று அதிகமாகப் பொழிந்தது.

மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், மழையின்மையால் ஏக்கத்துடன் வாடிய யாழ். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

யாழ். குடா நாட்டில் வரட்சி காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வடக்கில் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.