உலகின் போராட்ட இயக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பிரபாகரன்! அனந்தராஜ் புகழாரம்!

தேசியச் சொத்தாக இருக்கின்ற எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன் வல்வைமண்ணுக்குக் கிடைத்ததொரு முதுசம் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமுள்ளபோராட்ட இயக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனப் புகழாரம் சூட்டினார் யாழ்.வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவரும், எழுத்தாளருமானகலாபூஷணம் வல்வை ந. அனந்தராஜ்.

கலாபூஷணம் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய ‘வல்வையின் முதுசொம்’ தமிழர்களின்வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை(20) பிற்பகல்வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று வெளியிட்டுள்ள வல்வை முதுசம் நூலில் சேர்ப்பதற்காக வழங்கியிருந்த 14புகைப்படங்கள் உட்பட எட்டுப் பக்கங்களைத் தற்காலிகமாகநீக்கியிருக்கிறார்கள். ஆனால், அவரைப் பற்றிய கருத்துக்கள் பலவிடங்களிலும்வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நான் பல சந்தர்ப்பங்களில் பிரபாகரனின் நிர்வாகத் திறமையைஅவதானித்திருக்கிறேன். அவரது தலைமைத்துவம், மற்றவர்களை மதிக்கின்ற பண்பு,அநீதிக்காகக் குரல் கொடுக்கின்ற தன்மை என்பன என்னை மிகவும் கவர்ந்தவை.

பருத்தித்துறைக்கும், வல்வெட்டித்துறைக்குமிடையில் வரலாறு பண்பாடு,கலாசாரம், உணவு என அனைத்து வகைகளிலும் நெருங்கிய தொடர்புண்டு. நான்பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் எட்டு வருடகாலமாகஅதிபராகவிருந்திருக்கிறேன்.

கடலோடிப் பாரம்பரியம் எந்தெந்த வகைகளில் ஈழத்து மக்களுக்கு ஆதாரமாக விளங்கியதுஎன்பதை நான் பலவிடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

பிலிப் குணவர்த்தன,டாக்டர் என்.எம்.பெரேரா போன்றவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக மிகப் பெரியஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கின்றநிலையில் அங்கிருந்து தப்பி வந்த போது அவர்களைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச்சென்று அங்கே தங்க வைத்து அவர்களுக்குப் பாதுகாப்பையையும் வழங்கியவர்கள்எங்களுடைய கடலோடிகள்.

இதனை இன்னொரு சந்தர்ப்பத்தில் பிலிப் குணவர்த்தனவல்வெட்டித் துறையில் வைத்து வல்வெட்டித் துறை மக்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம் என நினைவு கூர்ந்தார்.

சிங்கள மக்களை இந்த மண்ணிலே வாழ்வதற்கானவழியமைத்துக் கொடுத்தவர்கள் வல்வெட்டித்துறை மக்கள். ஆனால், அதே சிங்கள அரசால்எங்களுடைய மண் அழிக்கப்பட்டு விட்டது.

இரண்டாம் மகாயுத்தத்தில் இலங்கை முழுவதும் பஞ்சத்தில் வாடிய போது வல்வெட்டித் துறைக் கடலோடிகள் தான் வெளிநாடுகளிலிருந்து அரிசி, மா போன்ற பொருட்களை இறக்கிஎல்லோருக்கும் விநியோகம் செய்தவர்கள்.

எங்களுடைய ஆயுதப் போராட்டம் 1977ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் அதற்குமுன்னரே 1969ம் ஆண்டளவில் வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியில் ஒரு மிகப் பெரியயுத்தம் இராணுவத்திற்கெதிராக அந்தப் பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டுக் கடலில் வீசப்பட்டது.அதன் பின்னர் அப்போதைய நகரபிதா தலைமையில் வல்வெட்டித்துறை சனசமூகநிலையத்திற்கு முன்னால் இராணுவத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதுஅதற்கெதிராக மக்கள் சாத்வீகமான முறையில் போராட்டம் நடாத்திய நிலையில் இலங்கைப்பொலிஸாரும், இராணுவமும் சேர்ந்து அந்த மக்களை அடித்துத் துன்புறுத்திய போதுமுதலாவது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அன்று இளைஞர்களாகவிருந்தஎங்களுக்கு இன்றும் இந்த விடயம் ஞாபகத்திலிருக்கிறது.அன்று எம்மத்தியிலிருந்த வீரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து தேசிய விடுதலைப்போராட்டத்தின் முக்கிய எழுச்சியாக உருவானது.

அதற்கு வித்திட்டவரும் எங்களுடையதேசியத் தலைவர் பிரபாகரன் எனவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.