27ம் திகதி நுகேகொடையில் இடம்பெறும் பேரணியில் தான் கலந்து கொள்வது உறுதி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவின் நலம் விசாரிப்பதற்காக சிறைச்சாலை சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துரலிய ரத்தன தேரர் சுயாதீனமான செயற்படவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வினவியுள்ளார்.
ரத்தன தேரர் சுயாதீனமாக செயற்படுவார் என தான் நினைக்கவில்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் நலம் விசாரிக்க சென்ற சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் இணைந்து கொண்டுள்ளனர்.
27ம் திகதி பேரணியை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதாக அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.