ஜல்லிக்கட்டு பிரச்சனை முழுவதுமாக முடிவுக்கு வருகிறது! இந்தியாவின் முக்கிய அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இளைஞர்கள், மாணவர்கள் என லட்சகணக்கானோர் இதில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும். அதை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்

இதனிடையில் இந்தியாவின் சுற்று சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்பது தான் அரசின் எண்ணமாகும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்ட வரைவு நகல் உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளது.

அந்த நகலானது உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். எனவே, இன்று அல்லது நாளை காலைக்குள் ஜல்லிக்கட்டு பிரச்சனை நிச்சயம் முடிவுக்கு வந்து விடும் என அவர் கூறியுள்ளார்.