ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காளைகளை ஏவி விட வேண்டும்.. ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்கள் மீது காளைகளை அவிழ்த்து விட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார் திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா

டோலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மாவுக்கு பிரபலமான நடிகர்கள், இயக்குநர்களைக் கிண்டல் செய்வது கைவந்த கலை. சூப்பர் ஸ்டார் ரஜினியைக் கூட கிண்டல் செய்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கச் செய்ய நினைப்பவர் ராம்கோபால் வர்மா.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா

 

 இதுபற்றி ராம் கோபால் வர்மா டுவிட்டரில், திரைப்படங்களில் விலங்குகளை துன்புறுத்த கூடாது என்று சொல்லும் இந்த அரசாங்கம் கடுமையாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் ஒத்துழைக்குது என்று கேள்வி எழுப்பியுள்ளார்

 

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது காளைகளை அவிழ்த்து விட வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ரத்தம் குடிக்கும் கழுகு எனவும் குறிப்பிட்டுள்ளார்.