தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
`விஐபி 2′ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல், தனுஷ் சேர்ந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘சிகரம் தொடு’ பட ஹீரோயின் மோனல் கஜ்ஜாரும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.