மெரினா கடற்கரையில் நடிகர் விஜய் : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நேரில் ஆதரவு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஐந்தாவது நாளாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு சென்று போரட்டத்தில் கலந்து கொண்டார். தன்னை அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தில் கர்சீப் கட்டியபடி அதிகாலை 2 மணியளவில் மெரினா கடற்கரைக்கு வந்த விஜய், சிறிது நேரம் போராட்டக் களத்தில் இருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை வீடியோ மூலம் பதிவு செய்திருந்தார். இதனால், நேற்று நடிகர் சங்கம் சார்பாக நடந்த மெளனப்போரட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.
மெரினா போராட்டத்துக்கு நேரில் விஜய் ஆதரவு தெரிவித்ததால், பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.