கோடைகாலத்தில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய தர்பூசணி எவ்வளவு நன்மைகளை நமக்கு தருகின்றதோ அதே போல தீங்கையும் தருகின்றது.
அன்றாடம் நாம் தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிட்டால், நாம் எதிர்பார்க்க முடியாத சில வகை பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதிக அளவில் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- தர்பூசணி பழத்தில் 92% அளவு நீரின் பங்கு உள்ளது. எனவே இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, அஜீரண கோளாறு, வயிற்று போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்சனைகளை உண்டாகிறது.
- தர்பூசணியில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது, மேலும் இது நமது உடலினுள் எளிதில் கொழுப்பாக மாறும் தன்மை கொண்டதால், அதிகப்படியான கொழுப்புகளை ஏற்படுத்துகிறது.
- சளிப் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது அதிகப்படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சிறுநீர் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு சிறுநீரக பிரச்சனையை அதிகப்படுத்துகிறது.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவாக தர்பூசணியை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அவர்கள் அதிகம் சாப்பிடுவதால், சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தி, பல பிரச்சனையை உண்டாக்குகிறது.
- கர்ப்பிணி பெண்கள் அதிகப்படியான தர்பூசணியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவர்களின் உடம்பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.