நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள் நமது நாட்டு இன மாடுகள்தான். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நமது சீதோஷ்ணம் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. அதற்கு அடிக்கடி மருந்துகள். ஊசிகள் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஜெர்சி பசுக்கள், காளைகளுடன் இயற்கையான முறையில் இணை சேர்ந்து, இனவிருத்தி செய்வதில்லை. செயற்கை கருவூட்டல் மூலமே இனவிருத்தி நடைபெறுகிறது. இதனால் இதன் பாலும் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
நாட்டு மாடுகள் பாலில் நோய்களை உருவாக்கக்கூடிய மூலக்கூறான ஏ1 புரதம் சுத்தமாக இல்லை. மாறாக ஏ2 புரதம் என்ற மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மூலக்கூறு இருக்கிறது. அதனால் நாட்டு மாடுப் பால் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் வெளிநாட்டுப் பசுக்கள், கலப்பின பசுக்களின் பாலில் ஏ1 புரதம் இருப்பதால் இந்த பாலை தொடர்ந்து அருந்தும் போது சர்க்கரை நோய், ஹார்மோன் சமநிலை பாதிப்படைதல் போன்றவை ஏற்படக்கூடும்.
பால் அதிகமாக கறப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த கலப்பின பசுக்களிடம், பால் மிக அதிகமாக அளவில் சுரப்பதற்காக பெண்மைக்கான ஹார்மோன் அதன் மரபணுவில் அதிகம் இருக்கிறது. வெறும் பெண்மைக்கான ஹார்மோன் மட்டுமே அதிகமாக இருப்பதால் இவை பாலியல் செயல்பாடுகளில் மிக மந்தமாகவே செயல்படும். இந்த பால் ஆண்களுக்கு வீரியக் குறைவையும், மந்தமான செயல்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, பாலுணர்வு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்று குழந்தை பேறு குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதனாலே தான் மருத்துவர்கள் சமீப காலமாக பாலை சாப்பிடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகமாக விளம்பரம் செய்தும் கூட, நம்நாட்டிலும், தமிழகத்திலும் பணக்காரர்கள் ஏராளமான நாட்டு மாடுகளையே வளர்க்கிறார்கள். சாமானிய விவசாயி நாட்டு மாடுகளை கைவிட்டு, வெகு ஆண்டுகளாகிவிட்டது. நாட்டு மாடுகள் இருந்தவரை விவசாயிகள் பொருளாதார சுயசார்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள்.
எனவே நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை. வீட்டில் வளர்க்க முடியாத நிலை என்றால் கூட, அதிக பணம் செலவானாலும் நாட்டு மாட்டுப் பாலை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், பண்ணைகள் அமைத்து கூட்டாக சேர்ந்து இருபது, முப்பது நாட்டு மாடுகள் வாங்கி வளர்க்கலாம். அவற்றின் பால் மற்றும் இதர பொருட்களை தினமும் பயன்படுத்தி, வருமானத்தை பிரித்துக்கொள்ளலாம். இன்றைய இளைஞர்கள் தான் நாட்டினங்கள் அழியாமல் இருக்க தொடர்ந்து போராட வேண்டும்.