மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தை குறைத்து அந்த பதவியை பெயரளவிலான பதவியாக மாற்றினால், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
இவ்வாறான அச்சுறுத்தலை எதிர்நோக்க அரசாங்கத்திற்கு இருக்கும் இயலுமை பலவீனமடையும் என 8 மாகாணங்களின் முன்னாள் ஆளுநர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர்களின் அதிகாரம் குறைக்கப்படுவதன் மூலம் ஒற்றையாட்டு நாடு சமஷ்டி நாடாக மாறும் எனவும் முன்னாள் ஆளுநர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கை குழுவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய ஆளுநர் ஒருவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக சுதந்திரமாக செயற்பட முடியாது உட்பட பல விடயங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் டிக்கரி கொப்பேகடுவ, ஜகத் பாலசூரிய, மொஹான் விஜேவிக்ரம, கருணாரத்ன திவுல்கனே, குமாரி பாலசூரிய, திஸ்ஸ பலல்ல, ஜீ.ஏ. சந்திரசிறி ஆகிய முன்னாள் மாகாண ஆளுநர்கள் கையெடுத்திட்டுள்ளனர்.