மாகாண முதலமைச்சர்கள், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.
நாளைய தினம் இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கியப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எண்ணமாக காணப்படுகின்றது என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் மீளவும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் மாகாண முதலமைச்சர்கள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமான மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்குமாறு மஹிந்தவிடம் மாகாண முதலமைச்சர்கள் கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.