மாநில அரசின் மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து முதல்வர் பன்னீர் செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகையில், அசால்ட்டாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதுவே நிரந்தர சட்டம் எனவும் கூறினார்.
மேலும், அவசர சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் 6 மாதத்துக்கு நடைமுறையில் இருக்கும்.
வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில் அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான் என்று கூறினார்.
அப்போது, மாநில அரசின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பன்னீர் செல்வம், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள், இதுபோன்ற விமர்சனங்களை சந்திப்பது சாதாரண ஒன்று தான் என அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.