தோல்வியில் முடிந்த முதலமைச்சர்கள் – மஹிந்த சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடச் செய்யாது ஒன்றிணைந்து போட்டியிடச் செய்வது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 7 முதலமைச்சர்களில் 6 பேரே கலந்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன் மஹிந்த தரப்பிலிருந்து அவருடன் பந்துல குணவர்தன , பிரசன்ன ரணதுங்க , ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இவ்வேளையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடச் செய்யாது ஒன்றிணைந்து போட்டியிடச் செய்ய மகிந்த ராஜபக்‌ஷ உதவ வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி செயற்படும் வரை அது நடக்காது என மகிந்த தரப்பினர் பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.