வாகன சாரதிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

வாகன சாரதிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபா தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமான ஏழு வீதி விதிமுறைகளை மீறும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்திய சிசிர கோதாகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையானது பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் முழு வடிவம் பெறும் எனவும், அபராத தொகையினை குறைப்பது தொடர்பில் அந்த குழு எந்த வித முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.