அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிக்கு அந்த நாட்டிலே பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது ஒருபுறம் இருக்க நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்தினை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றமை குறித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, “ட்ரம்பின், தலையீடு செய்யாத வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக” ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
2020 ஆட்சியை கவிழ்ப்பேன் என கூறிவரும் மஹிந்த ராஜபக்ஸ அதற்கு பின்னர், தனக்கு ட்ரம்பின் ஆதரவு பெற்றுக்கொள்ளவதற்காகவே இவ்வாறு எண்ணியே தனது வாழ்த்தினை கூறிருப்பதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்யையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்ரம்ப் பதவியேற்புக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.