இலங்கை முழுவதும் நடந்தே செல்லும் பெண்!

இலங்கை முழுவதும் 1268 கிலோ மீற்றர் நடந்து செல்லும் முயற்சியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று ஹங்கம நகரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10ஆம் திகதி கதிர்காமம், கிரிவெஹேர என்ற பிரதேசத்தில் இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

தேவிகா காசிவெட்டி என்ற பெண்ணே இவ்வாறு பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் எதிர்வரும் மே மாதம் கிரிவேஹேர என்ற பகுதியில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளார்.

கதிர்காமம், மாத்தறை, களுத்துறை, கொழும்பு, சிலாபம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஊடாக கதிர்காமம், கிரிவேஹேர வரை கடல் வழியாக பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.