மஹிந்தவை எச்சரிக்கும் றோ புலனாய்வு அமைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய உளவு அமைப்பான றோவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது மஹிந்தவுக்கு அரசியல் ரீதியாக சில அழுத்தங்களை பிரயோகித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள் என றோ பிரதிநிதி கேட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாராக இருப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார். எனினும் தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனால் இவ்வாறு அரசியலில் இருக்க நேரிட்டுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் அழுத்தம் பிரயோகித்தால் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இங்கு சில கோரிக்கைகள் இரண்டு பிரதான தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.