தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அவசர உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி இன்று மதுரையில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அதை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல்வர் மதுரை சென்று பாண்டியன் ஹொட்டலில் தங்கி ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், அலங்காநல்லூர் மக்கள் இந்த அவசர சட்டமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
நிரந்தர சட்டப் பாதுகாப்பும், மிருகவதை தடைச் சட்டத்தில் காட்சிப் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். அதை செய்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெற அனுபதிப்போம் என்று கூறி விட்டனர்.
இதனால் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் சூழல் இருப்பது போன்று தெரியவில்லை. அதனால் முதல்வர் ஓ.பி.எஸ் தனது அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.