அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்ற சூளுரையோடு தன் பயணத்தை தொடங்கியுள்ளார் டிரம்ப்.
இந்நிலையில், அடுத்த வாரம் டொனால்டு டிரம்ப் முதன் முதலாக தான் பதவியேற்றபின் ஒரு வெளிநாட்டு தலைவரை சந்திக்கவுள்ளார்.
பிரித்தானியா நாட்டின் பிரதமரான தெரேசா மேவை தான் டிரம்ப் சந்திக்கவுள்ளார். இந்த விடயத்தை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் Sean Spicer உறுதிசெய்துள்ளார்.
பிரித்தானியா நாடானது ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியுள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு வர்த்தக ஒப்பந்தம் விடயமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
சமீபத்திய பேட்டியில் கூட பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது நல்ல விடயம் என டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மெக்சிகோவின் ஜனாதிபதி Enrique Pena Nietoவை ஜனவரி 31ல் சந்தித்து பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.