ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மகளுடன் களமிறங்கி போராடும் சிவகார்த்திகேயன்?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், பிரபலங்கள் என எந்த பாகுபாடும் இன்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் களமிறங்கியுள்ளார். மெரீனாவில் இளைஞர்களுடன் இளைஞர்களாக அவர் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் குழந்தை ஆராதனாவும் இந்த ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்தில் களமிறங்கியுள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஒரு குழந்தை கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷத்துடன் விளம்பர பதாகையை ஏந்தியபடி வருவதுபோல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த குழந்தை சிவகார்த்திகேயனின் குழந்தை என்றும் கூறி வருகின்றனர்.